த.தே.கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு பயணம்

இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ பய­ண­மொன்றை இம்­மாத இ-று­தியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மேற்­கொள்­ள­வுள்­ளதாக கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா உறு­தி­படத் தெரி­வித்துள்ளார். எதிர்­வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திக­தி­களில் வவு­னி­யாவில் நடை­பெ­ற­வுள்ள தமி­ழ­ரசுக் கட்­சியின் தேசிய மாநாட்­டிற்கு முன்­ன­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த உயர்­மட்­டக்­கு­ழு­வினர் இந்­தி­யா­விற்கு விஜயம் செய்து புதிய இந்­திய மத்­திய அர­சுடன் பேச்­சுக்­களை நடத்­த­வுள்­ளனர்.

இச் சந்­திப்­பின்­போது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் தற்­போ­தைய நிலை­மைகள் தொடர்­பாக இந்­திய அர­சாங்­கத்­திற்கு விளங்­கப்­ப­டுத்­தப்­படும்.

அத்­துடன் எமது மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் முயற்­சி­க­ளுக்கு இந்­தி­யாவின் புதிய அரசின் ஒத்­து­ழைப்பு மிகவும் அவ­சி­ய­மா­னது என்­பதை வலி­யு­றுத்­து­வ­துடன்அதனை விரை­வாக காண்­ப­தற்கு இந்­தியா இலங்கை அரசை வலி­யு­றுத்­த­வேண்டும் எனவும் கோர­வுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் இன்று மக்கள் எதிர்­நோக்கி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய வழிமுறைகளை எடுத்துக்கூறி அதற்கான ஒத்துழைப்பையும் வழங்குமாறு கோரவுள்ளோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply