மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் போது நாலாபக்கமும் எதிர் கணைகள்

தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகின்ற போது நாலா பக்கங்களிலிருந்தும் எமக்கெதிராக வரும் தாக்குதல்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். எத்தகைய தூற்றுதல்கள் ஏளனங்களை எதிர்கொள்ள நேர்ந்த போதும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு நாம் செயற்படும் போது அனைத்து விமர்சனங்களும் ஏளனங்களும் செல்லாதவைகளாகிவிடும் எனவும் தெரிவித்தார்.காணி சீர்த்திருந்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் 50000 பேருக்கு “ரண்பிம” காணி உறுதிகள் வழங்கும் உத்தியோகபூர்வ வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என நாட்டின் அனைத்துப் பிரதேசங் களிலுமுள்ளோர் தமக்கான ‘ரண்பிம’ காணி உறுதிகளை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றபோது ஒரு இலட்சம் பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதாகத் தெரிவித்திருந்த போதிலும் தற்போது காணி சீர்த்திருத்த ஆணைக்குழு மஹாவலி உட்பட அனைத்து நிறுவனங் களுக்கூடாகவும் சுமார் ஐந்து இலட்சம் காணி உறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளோம்.

இக்காணி உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள காணி உரிமையாளர் களான நீங்கள் அதிகளவு காலம் எதிர் பார்ப்புடன் காத்திருந்தீர்கள் இன்று அது உங்கள் கைகளில் கிடைத் துள்ளது. ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க அவர்களின் காலத்தில் விசேட சட்ட மூலம்

ஒன்றினால் இழந்திருந்த காணிகள் மீள அரசாங்கத்துக்குச் சுவீகரித்துக் கொள்ளப்பட்டன. இதனையடுத்து விவசாயத்திற்கும் ஏனைய கைத்தொழில்களுக்கும் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் காணி பெறப்பட்டது. அதன் ஒரு அம்சமாகவே மக்களுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, கடந்த கால அரசாங்கங்கள் காணி மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கிணங்க கம்பனிகளுக்கு காணிகளை வழங்கின. அத்தகைய அரசாங்கங்கள் விவசாயத்தின் மீது நம்பிக்கையில்லாமல் வயல்களை நிரப்பி தொழிற்சாலைகளை ஆரம்பித்தன. விசாயத்துறை தொடர்பில் கவனம் செலுத்தாக அரசாங்கங்கள் அவை. நாம் இந்த நிலையை மாற்றியமைந்துள்ளோம்.

நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் மக்களின் காணிகளை கம்பனிகளுக்கு வழங்கியதில்லை. எம்மிடம் காணிகள் பற்றியோ வேறு எதவும் பற்றியோ மக்கள் எதுவும் கூறவில்லை. நாடு பிளவு படாமல் பாதுகாத்துத் தருமாரே கேட்டனர். அவர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றினோம்.

அக்காலத்தை விட மக்களின் வாழ்க்கைத் தரம் தற்போது முன்னேற்றமடைந்துள்ளது. வேலையில்லாப் பிரச்சினைகள் தற்போது வெகுவாகக்குறைந்துள்ளன. வெளிநாட்டுக் கையிருப்புகள் அதிகரித்துள்ளன.

உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தபோதும், நாம் எமது பொருளாதாரத்தை மேம்படுத்தி நிதி நிறுவனங்களையும் பாதுகாத்தோம்.

அரச சேவைத்துறையை பலப்படுத்தியுள் ளோம். ஆறு இலட்சமாக இருந்த அரச ஊழியர் எண்ணிக்கை தற்போது 14 இலட்சமாக்கியுள்ளோம். தொழிலற்றிருந்த பட்டதாரிகளுக்கு அரச துறையில் இலட்சத்துக்கு மேல் தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். காணி உறுதியற்றோருக்கு காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மின்சார வசதி இல்லாத கிராமங்களே நாட்டில் தற்போது இல்லை என்று கூறுமளவுக்கு 100ற்கு 96 வீதம் மின்சாரம் வழங்கியுள்ளோம். மீதம் நான்கு வீதமான பகுதிகளுக்கும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.

மேல் கொத்மலை, நுரைச்சோலை போன்ற மின் உற்பத்தி நிலையங்களை நாம் அமைத்தமையின் பலன்களை மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றார்கள். 2005ல் நாம் வாக்குகளை எதிர்பார்த்து மக்களுக்கான அபிவிருத்தியை மேற்கொள்ளவில்லை. மாறாக மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதையே நோக்காகச் செயற்பட்டோம். எதிர்வரும் மாதத்தில் சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன் போது அவர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.

இதற்கிணங்க நாம் அபிவிருத்தியில் படிப்படியாக நாட்டை முன்னேற்றி வருகின்றோம். ஒரு பகுதி என்றில்லாமல் முழு நாட்டையும் எம்மால் அபிவிருத்தி செய்ய முடிந்துள்ளது.

எமக்கு இலக்குகள் உள்ளன அந்த இலக்கை வெற்றி கொள்ள நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மஹிந்தோதய விஞ்ஞான கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நாம் செயற்படுத்தியுள்ள ‘நெனசல” அறிவகத்திட்டம் சர்வதேசத்தின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.

இது உலகின் சிறந்த திட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் பிரான்ஸில் எமக்கு விசேட விருதும் வழங்கப்படவுள்ளது என்றார்.

மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா காணிச் சீர்த்திருந்த ஆணைக்குழுவின் தலைவர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply