காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை : ஜீ.எல்.பீரிஸ்
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அரசாங்கம் நியமித்திருந்தாலும் அதன் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடு வதில்லை. ஆணைக்குழு தமக்குத் தேவையானவாறு செயற்படு வதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் 23/2 நிலையியல் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக் கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக் குழுவில் 16,000ற்கும் அதிகமானவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதனுடன் தொடர்புடைய சர்வதேச சட்ட விதிமுறைகள் குறித்து நிபுணத்துவ அறிவுள்ளவர்களின் ஆலோசனைபெறுவது அவசியமாகும் என ஆணைக்குழு ஜனாதிபதியைக் கோரியிருந்தது.
இது தொடர்பான துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதன் பிரகாரமே சர்வதேச நிபுணர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பவர்களிடமிருந்து எவ்வாறு சாட்சியங்களைப் பதிவு செய்வது. அவர்களிடமிருந்து இரண்டாவது தடவையும் விசாரணைக்கு உட்படுத்துவதா உள்ளிட்ட சகல விடயங்களையும் ஆணைக்குழுவே முடிவு செய்யும். இது தொடர்பில் அரசாங்கம் எந்தத் தலையீடும் செய்யாது. இது அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. ஆணைக்குழுவை நியமிப்பதே அரசாங்கத்தின் பணி.
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சட்டமா அதிபரின் ஆலோசனை தேவை என கோரப்பட்டால் அதற்கான ஒத்துழைப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆணைக் குழுவுக்குத் தேவையான சகலவித ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் வழங்கும். ஆணைக்குழு இன்னும் தனது பணியை பூர்த்திசெய்யவில்லை. அதன் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து கேள்வியெழுப்புவது அரசாங்கத்தின் பணியல்ல. அது உகந்ததும் அல்ல என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply