ஜப்பான் ஹிரோஷிமாவில் நிலச்சரிவு 27 பேர் பலி

ஜப்பானின்  தென்பகுதியில் உள்ள ஹிரோஷிமா நகரில் கடந்த சில நாட்களாக  பலத்த மழை பெய்து வருகிறது.கடந்த  3 மணி நேரத்தில் அங்கு 204 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது இதனால் அங்கு ரோடுகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. இங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் பலியானார்கள், 20 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். 22 பேர் மாயமாகி உள்ளனர். என ஜப்பான் பேரீடர் மீட்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.மீட்புப்பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஹெலிகாப்டர் மூலமாக நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். சாலைகள் சேதம் அடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமாவில் இருந்து 261 மைல் தொலைவில் உள்ள நாகசாகியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.ஜப்பான் செங்குத்தான பகுதியாக இருப்பதால் ஆண்டுக்கு 1200 நிலச்சரிவு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு 770 நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply