தேர்தலில் வெற்றியீட்டி மக்களுக்கு பணிபுரியும் எண்ணம் ஐ.தே.கவுக்கு இல்லை : கெஹெலிய ரம்புக்வெல
ஐ. தே. க.வுக்கு தேர்தலொன்றின் மூலம் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்யும் நோக்கம் ஒருபோதும் கிடையாது என ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரி வித்தார். தேர்தலொன்றை அறிவித்தல் ஏதோ அவர்களுக்கு ‘அஜீரணம்’ ஏற்பட்டது போன்று தட்டுத் தடுமாறுகின்றனர். தேர்தல் குறித்து ஐ. தே. க. மயக்கநிலையில் இருப்பதாகவே எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஆனால் ஐ. ம. சு. மு. அவ்வாறு இல்லை.
மாநகர மக்களின் பூரண ஆசீர்வாத த்துடன் எந்த தேர்தலையும் சந்திக்கும் ஆற்றலும் துணிவுடனு முள்ளது. குண்டசாலை தேர்தல் தொகுதியில் அமுனுகம கஹட் டகஹ அங்க ஆகிய பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கிருந்த மக்கள் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் போது கூறியதாவது :-
மக்கள் எமது ஆட்சியை விரும்புகின்றனர். மக்களின் உதவிகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்குண்டு. நாம் எமது கடமைகளை சரியான முறையில் செய்து வருகிறோம். குண்டசாலையில் நாம் தற்போது 4100 இலட்சம் ரூபா ஒதுக்கியுள்ளோம். பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் அங்கு தற்போது இடம்பெற்று வருகின்றன.
மேலும் மேற்குறித்த தொகையைவிட மேலதிகமாக மின்சாரம், குடிநீர் வசதி. கல்வி. சுகாதாரம், விவசாய அபிவிருத்தி துறைகளுக்கு ஒதுக்கி பாரிய வளர்ச்சி கண்டுள்ளோம்.தற்போது 98% வீதமான மக்களுக்கு போதுமான மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதுபோன்று நாடு முழுவதிலும் எமது அரசாங்கம் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளது. எதிர்வரும் ஊவா மாகாண தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றி பெறுவோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply