திரிபோலி விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக மிஸ்ரதா போராளிகள் அறிவிப்பு
லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக மிஸ்ரதா பகுதி போராளிகள் அறிவித்துள்ளனர். லிபியாவின் முன்னாள் அதிபர் முவம்மர் கடாபி கொல்லப்பட்ட பிறகு தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றுவது தொடர்பாக தேசிய படைகளுக்கும், இஸ்லாமிய போராளி குழுக்களுக்கும் இடையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதனையடுத்து, கடந்த ஜூலை 13-ம் தேதி திரிபோலி சர்வதேச விமான நிலையம் இழுத்து மூடப்பட்டது. மட்டிகா விமான நிலையத்தின் மூலம் விமானப் போக்குவரத்து தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், திரிபோலி சர்வதேச விமான நிலையத்தில் காவலுக்கு இருந்த எதிரி குழுவின் படைகளை எதிர்த்து போரிட்டு, அவர்களை ஓடச்செய்து, திரிபோலி சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றி, தங்கள் வசமாக்கிக் கொண்டதாக லிபியாவில் உள்ள பல்வேறு போராளிக் குழுக்களில் ஒன்றான மிஸ்ரதா நகரை சேர்ந்த போராளிக் குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர்.
விமான நிலைய கட்டிடம் மற்றும் விமானங்களின் மீது இந்தக் குழுவினர் தங்களது கொடியுடன் ஏறி நிற்கும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
விமான நிலையத்தையடுத்து, 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் திரிபோலியையும் அவர்கள் கைப்பற்றி விடக்கூடும் என்ற கருத்து அங்கு நிலவி வருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply