மனைவியிடமிருந்து பறித்த குழந்தையை கற்பாறையில் அடித்துக் கொன்ற தந்தை பேருவளையில் சம்பவம்

மனைவியிடமிருந்த பெண் குழந்தையை பறித்து கற்பாறையில் அடித்துக் கொலைசெய்த சம்பவமொன்று பேருவளை, புபுலவத்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஒரு வயதும் 9 மாதமுடைய குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். கணவன் – மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். சம்பவ தினமான நேற்று கணவனுக்கு தனது குழந்தையை காண்பிப்பதற்காக மனைவி சென்றுள்ளார். பேருவளை புபுலவத்த பகுதியிலிருந்து கலேபன்சலவுக்கு (விகாரைக்கு) குழந்தையுடன் மனைவி சென்றுள்ளார். இதன்போது தாயிடமிருந்த பெண் குழந்தையை பறித்து கணவன் கற்பாறையில் அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த குழந்தை நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஆஸ்பத்திரியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply