அரசியல், நிர்வாக ரீதியில் பெண்களை அதிகம் உள்வாங்கியது சு. கட்சியே : கெஹலிய ரம்புக்கல்ல 

விவசாயிகள், மீனவர்கள், கைத் தொழிலாளர், உள்ளடங்கலாக ஐந்து மக்கள் பிரிவினரும் ஜனாதிபதியுடன் உள்ளவரை ஜனாதிபதி தலைமையிலான எத்தேர்தலிலும் ஆளும் கட்சியே வெற்றிபெறும். எந்த சக்திகளினாலும் எமது அரசை தோற்கடிக்க முடியாதென ஊடகத் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்கல்ல தெரிவித்தார். குண்டசாலை தொகுதியில் பலகொல்ல பொது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குண்டசாலை தொகுதி ஸ்ரீ.ல.சு.க. பெண்கள் அமைப்புகளுக்கான மகாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் கெஹலிய ரம்புக்கல்ல தமதுரையில், யுத்தத்தின் போது பெண்களே பலதுயரங்களை அனுபவித்தனர்.

கணவனை இழந்தனர், மகளை இழந்தனர். யுத்த காலத்தில் எல்லை கிராமங்களில் வாழ்ந்த பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பயங்கர நிலைமையை இல்லாமல் செய்து எமது ஜனாதிபதி சுதந்திரமான ஒரு யுகத்தினை உருவாக்கியுள்ளார்.

ஸ்ரீ.ல.சு.க. உலகிற்கு முதலாவது பெண் பிரதமரையும், முதலாவது அதிகாரபூர்வ பெண் ஜனாதிபதியையும் தந்த கட்சி. இந்த கட்சியிலேயே பெண்கள் அதிகம் நிர்வாகிகளாக, உறுப்பினர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். இந்த அரசாங்கத்தின் வெற்றிக்கு பெண்களின் பங்களிப்பு முழுமையாக கிடைத்துள்ளது. தொடர்ந்தும் பெண்களது சக்தி எமக்கு தேவை ஜனாதிபதியின் பஞ்ச சக்தியுடன், பெண்கள் சக்தியும் இந்த அரசாங்கத்தினை தொடர்ந்தும் வெற்றிபெற செய்யும் என்றார்.

இங்கு உரையாற்றிய திருமதி ஜெயராஜ் பெர்னாண்டோபுள்னே தமதுரையில், இணைய வசதி சகலருக்கும் கிடைக்கக்கூடியதாகவுள்ளது. இணையத்தின் மூலம் கணவன் எங்கிருந்தாலும் உரையாடுகின்றனர். இந்த அரசாங்கத்தில் மின்சாரதடை இல்லை. முன்னர் முழு நாட்டிலும் மின்வெட்டு காணப்பட்டது. இன்று காபட் வீதிகள் போடப்பட்டுள்ளன. வெளியே சென்ற கணவன் அல்லது பெண்கள் விரைவில் வீட்டுக்கு வந்து சேரக்கூடியதாகவுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply