இலங்கையின் இறைமையை இந்தியா மதிக்க வேண்டும் : பத்மஸ்ரீ அவ்தாஸ் கெளஷால்
இந்தியா இலங்கையுடன் பேச்சுக்களை மேற்கொள்ளலாம் ஆலோசனைகளை வழங்கலாம். ஆனால் அந்த நாடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட முடியாது. இலங்கையின் இறைமையை இந்தியா மதிக்க வேண்டும் என காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணத்துவ குழுவின் உறுப்பினரான பத்மஸ்ரீ அவ்தாஸ் கெளஷால் தெரிவித்துள்ளார்.காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவிற்கு ஆலோசனை வழங்கவென நிபுணத்துவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர் பத்மஸ்ரீ அவ்தாஸ் கெளஷால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கையின் இறைமையை மதித்து செயற்பட வேண்டும். இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றயவர்களின் இறைமையை மதித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரிவினைவாதிகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டால் இந்தியாவின் உணர்வு எவ்வாறாக இருக்கும் என பத்மஸ்ரீ அவ்தாஸ் கெளஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக்கூடாது என தெரிவித்த அவ்தாஸ் கெளஷால், தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து தம்மை இலங்கையர்களாக கருதி இலங்கையின் அரசியலமைப்பு, சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
“நாம் (இந்தியா) எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைத் தவிர்த்து, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும் அதே நேரம், பெரிய அண்ணன் என்ற நிலைப்பாட்டிலிருந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா முயலக்கூடாது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்துப் பேசினர். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply