தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம் கண்டி ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை இரு சிங்களப் பெண்களின் உயிர்களைக் காத்தது
மூளை இறந்த நிலையில் மட்டக்களப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பெண் ஒருவரின் இரு சிறுநீரகங்கள் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இரு சிங்கள இனத்தவர்களுக்கு கண்டி ஆஸ்பத்திரியில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது. சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதோடு, அவர்கள் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சாலிய பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மொனராகல, பெதியாய கிராமத்தில் வசித்த 41 வயதான கோவிந்தசாமி விக்னேஷ்வரி எனும் மூன்று பிள்ளைகளின் தாயின் இரு சிறுநீரகங்களே இவ்வாறு இரு உயிர்களை காப்பாற்றப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குச் சென்ற மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மூலம் கோவிந்தசாமி விக்னேஸ்வரியின் இரு சிறுநீரகங்களையும் அகற்றி கண்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்து, சத்திர சிகிச்சைகள் மூலம் சிங்கள இனத்தவருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொத்துவில் கோயிலுக்கு பிள்ளைகளுடன் சென்ற வேளை இவர்கள் பயணித்த ஆட்டோ எருமை மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனது மனைவி படுகாயமடைந்ததாக சிறுநீரகத்தை அன்பளித்த விக்னேஷ்வரியின் கணவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மனைவியின் மூளை இறந்துள்ளதால் அவரை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியதால்
அவரின் சிறு நீரகத்தை இரு நோயாளர் களுக்கு வழங்க முடிவு செய்ததாக அவர் கூறினார். இதன் மூலம், தனது மனைவிக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர், மண்ணோடு மண் ணாகும் உடலை இவ்வாறு நற்காரியத்திற்கு பயன்படுத்த முடிந்தது குறித்து மகிழ்வதாக குறிப்பிட்டார். மனைவியின் சிறுநீரகங்கள் சிங்கள இனத்தவர் இருவருக்குத்தான் வழங்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அது குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். எமக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் என பேதம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply