அமெரிக்காவில் துப்பாக்கி சுடும் பயிற்சியாளரை தவறுதலாக சுட்டுக் கொன்ற 9 வயது சிறுமி
அமெரிக்காவின் லாஸ்வெகாஸ் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளிக்கும் ’புல்லெட்ஸ் அண்ட் பர்கெர்ஸ்’ என்ற மையம் ஒன்றுள்ளது. இங்கு ‘ஊஸி’ எனப்படும் நவீனரக துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. நியூ ஜெர்ஸி பகுதியில் இருந்து லாஸ்வெகாஸ் நகரை காண பெற்றோருடன் வந்த 9 வயது சிறுமி, இங்கு பயிற்சி பெற ஆசைப்பட்டாள். அவளது ஆசையை நிறைவேற்ற பெற்றோரும் பயிற்சி மையத்தினுள் அழைத்துச் சென்றனர். ‘ஊஸி’ துப்பாக்கியால் ஒரு முறை குண்டு வெளியேறும் ‘சிங்கிள் ஷாட்’ முறையில் அவள் இலக்கினை நோக்கி பல முறை சரியாக சுட்டதையடுத்து, தானியங்கி (ஆட்டோ) முறையில் அவள் சுட முயன்ற போது, குண்டுகள் சரமாரியாக வெளியேறிய அதிர்ச்சியில் அவளது கைப்பிடியில் இருந்து நழுவிய துப்பாக்கி, இடதுப்புறம் நின்றிருந்த பயிற்சியாளரின் பக்கம் திரும்பியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த 39 வயது பயிற்சியாளரின் உடலை ஜல்லடைக் கண்ணாக துளைத்தெடுத்த துப்பாக்கி, அவரது உயிரை குடித்த பின்னரே ஓய்ந்தது.
’புல்லெட்ஸ் அண்ட் பர்கெர்ஸ்’ நிறுவனம் அரசின் உரிய அனுமதியுடன் நடைபெறுவதால் இந்த விபத்து தொடர்பாக அந்த சிறுமிக்கு தண்டனை ஏதும் வழங்கப்பட வாய்ப்பில்லை என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply