தெற்கு சூடானில் ஐ.நா. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடான் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான சரக்கு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகினர். தெற்கு சூடானின் எண்ணெய் வளம் மிக்க வடபகுதியில் உள்ள வாவ் நகரில் இருந்து பெண்டியுவில் உள்ள ஐ.நா. முகாமுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்றபோது, தகவல் தொடர்பு அறையின் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர், பெண்டியு நகரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியானதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ரஷ்ய நிறுவனம் ஒன்று, போர் பதற்றம் நிறைந்த அந்த பகுதியை தங்கள் வசம் வைத்துள்ள போராளிக் குழுக்கள் அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக யூகங்களின் அடிப்படையில் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply