சிரியாவின் ஆசாத் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமனம்

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்தை எதிர்த்து கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக அங்கு உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அங்கு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. முதன்முறையாக பல வேட்பாளர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் 88.7 சதவிகித வாக்குகளைப் பெற்று ஆசாதே மீண்டும் அதிபர் பதவியைப் பிடித்தார். தேர்தல் முடிந்து தற்போது இரண்டு மாதங்கள் முடிந்துள்ள நிலையில் 11 புதியவர்களுடன் அவர் தனது அமைச்சரவையை அறிவித்துள்ளார். இந்த அமைச்சர்களில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய ஹசன் அல் நூரியும் நிர்வாக அபிவிருத்தி அமைச்சராகப் பதவி அளிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பிரதமர் வயேல் அல் ஹலாகி, வெளியுறவுத்துறை அமைச்சர் வலேது முவாலெம், உள்துறை, நீதி, மதம், தகவல் மற்றும் ஜனாதிபதி விவகார அமைச்சகம் போன்றவற்றின் அமைச்சர்கள் மாற்றப்படவில்லை.

1,90,000 பேரை பலி வாங்கி மூன்று வருடங்களுக்கும் மேலாக பொருளாதார சீரழிவை சந்தித்துவரும் தங்கள் நாட்டினை மேம்படுத்தும்விதமாக இந்த புதிய அமைச்சர்கள் அனைவரும் பொருளாதாரத்துறை சார்ந்த பதவிகளே அளிக்கப்பட்டனர்.

நிர்வாக மேம்பாட்டு அமைச்சர் என்ற புதிய பதவி உருவாக்கத்துடன் வெளியுறவு வணிகம், நீரியல் வளங்கள், போக்குவரத்து, வீட்டுவசதி, பொருளாதாரம், தகவல் தொடர்பு, சுகாதாரம் போன்ற துறைகளும் மாற்றங்களைக் கண்டுள்ளன என்று அரசுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply