புலிகளால் தமிழினம் வெக்கித் தலைகுனிய வேண்டிய நிலை : கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்
தமிழ் மக்களின் ஜனநாயக தார்மீகப் போராட்டம் புலிகளின் முறை தவறிய போராட்டத்தினால் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சர்வதேசத்தில் தமிழினம் வெக்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தத்தில் தாம் தோல்வி கண்டுள்ளமையை புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். அதனை மறைப்பதற்காக அவர்கள் மக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply