கிரேக்க நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது
கிரேக்க நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.6 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், ஐரோப்பிய புவியியல் துறை 5.8 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக தெரிவித்துள்ளது. தலைநகர் ஏதென்ஸ் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. உள்ளூர் நேரப்படி காலை 6.45 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஏதென்ஸ் மற்றும் மைலாஸ் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் 140 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்கொண்டிருந்தது.
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் மத்திய தரைக்கடல் பகுதியில் கிரேக்க நாடு அமைந்திருந்தாலும், அங்கு நிலநடுக்கங்களால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டதில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply