புலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும் : வீ.ஆனந்தசங்கரி
2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும். அதில் இக்கூட்ட மைப்பினர் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தமிழ் மக்களை ஆளும் தகுதி அவர்களுக்கே உள்ளது எனவும், அவர்களது அங்கீகாரத்துடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தியே தாம் தேர்தலில் போட்டியிடு வதாகவும் தெரிவித்துள்ளனர். அப்படியாயின் புலிகள் தொடர்பாக இன்று முன்வைக் கப்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றச் சாட்டுக்களுக்கும் பதில் கூற வேண்டியவர்கள் தமிழ்க் கூட்ட மைப்பினரே என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
புலிகள் இருந்தபோது ஒரு கதையும், இப்போது அவர்கள் இல்லையென்றதும் மற்றொரு கதையும் பேசக் கூடாது. புலிகள் செய்த பல குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பல தலைவர்களுக்கும் நன்கு தெரியும். அதனால் இவர்கள் விசாரணைக் குட்படுத்தப்பட வேண்டியவர்கள். குறைந்தது புலிகளைப் பற்றிய வெளிவராத உண்மைகளையாவது இவர்களிடமிருந்து கேட்டறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப் பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் மிகவும் பாரதூரமான விடயம். இலங்கை அரசாங்கம் தடை செய்த ஒரு அமைப்பை அவர்கள் தமதும், தமிழ் மக்களதும் பிரதிநிதிகள் என வர்ணித்துள்ளனர். தேர்தல் விஞ்ஞாபனம் என்பது வெறும் துண்டுப் பிரசுரம் அல்ல. அது ஒரு கட்சியின் உத்தியோகபூர்வ ஆவணம். எனவே இதற்கு தமிழ்க் கூட்டமைப்பினர் பதில் கூறியே ஆக வேண்டும் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இன்று என்னை விமர்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பலர் அன்று புலிகளை கடுமையாக விமர்சித்தவர்களே. பதவி ஆசையால் குத்துக்கரணம் போட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பலரதும் இரட்டை வேடம் எனக்குத் தெரியும். விரைவில் அவற்றை முழுமையாக அம்பலப்படுத்து வேன் எனவும் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply