ஆப்கனில் உளவுத்துறை அலுவலகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 6 பேர் பலி

ஆப்கனின் கிழக்கு பகுதியில் உள்ள நகரமொன்றில் செயல்படும் உளவுத்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாமடைந்தனர். அதே போல் அந்நாட்டில் மேற்கு பகுதியில் நடைபெற்ற மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேட்டோ படையினர் படிப்படியாக வெளியேறி வரும் நிலையில் அங்கு தொடர்ந்து மோதல்கள் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜலாலாபாத்தில் உள்ள பாதுகாப்பு துறை தலைவர்கள் அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதலின் போது அரசுப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நீடித்தாகவும், இச்சண்டையின் போது 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கிழக்கு நங்கர்ஹர் மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளரான அகமது செயா அப்துல்சாய் கூறினார்.

அலுவலகம் மீது டிரக் மற்றும் சிறிய கார் ஆகியவற்றில் நிரப்பப்பட்ட குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் நான்கு உளவுத்துறை அதிகாரிகளும் இரு பொது மக்களும் பலியானதாக அப்துல் சாய் தெரிவித்தார். அதன்பிறகு தான் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாக அவர் மேலும் கூறினார். இத்தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

அதே போல் பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் 11 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply