பதுளையில் சுதந்திரகட்சியின் 63 ஆவது மாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 63 வது மாநாடு நாளை 02ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 2 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெறவுள்ளது.பதுளை வின்சன் டயஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இவ் 63வது மாநாட்டில் அமைச்சர்கள், சிரேஷ்ட அமைச்சர்கள் மாகாண சபை முதலமைச்சர்கள் மாகாண ஆளுநர்கள், முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேசசபை, நகர சபை, மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொள் ளவுள்ள அதேவேளை இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை நீர் முகா மைத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உள்ளிட்ட பிரமுகர்கள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியின் இணை ப்பாளர் வடிவேல் சுரேஷ் தெரி வித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply