பாகிஸ்தானில் நீடிக்கும் அரசியல் குழப்பம்: தளபதிகளுக்கு ராணுவ தலைவர் அழைப்பு

பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு எதிரான இம்ரான்கான்– காத்ரி ஆகியோரின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நவாஸ் ஷெரிப் வீட்டை முற்றுகையிட சென்ற தொண்டர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதில் 8 பேர் பலியாகினர். 400–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து இம்ரான்கான மற்றும் காத்ரியும் இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மதகுரு தாகிருல் காத்ரி கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் நாங்கள் ஒன்றிணைந்துவிட்டோம். இருவரும் வெவ்வேறு அல்ல. நவாஸ் ஷெரிப் பதவி விலகும் வரை இணைந்து போராடுவோம் என்று கூறியிருந்தனர். இதனால் நிலைமை நாளுக்கு நாள் மேலும் மேலும் சிக்கலாகி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு ராணுவ தலைவரான ஜெனரல் ரஹீல் ஷெரிப், நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மற்ற படைப்பிரிவுகளின் தளபதிகளை பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் முடிவு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வருமா அல்லது நிலைமையை மேலும் சிக்கிலாக்குமா என அரசியல் நோக்கர்கள் கவலை கொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply