ஜனாதிபதித் தேர்தலை எதர்கொள்வதற்கு ஐ.தே.க.வுக்குள் புதிய வேலைத்திட்டம்
விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் நோக்கில் கட்சியில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான இலக்கைக் கொண்ட மாற்றங்களையும் புதிய வேலைத்திட்டங்களையும் கட்சி மேற்கொண்டு வருகின்றது. அதே போன்று கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குள் இணைவதற்கு மீளாய்வு விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரமான திஸ்ஸ அத்த நாயக்க தெரிவித்தார்.கண்டி – அளிவத்த நிவடேர்ல் ஹோட்டல் மண்டபத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திஸ்ஸ அத்த நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இங்கு தொடர்ந்தும் பேசுகையில்;
கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணந்துக் கொள்ளும் பொருட்டு சமர்பிக்கும் மீளாய்வு விண்ணப்பங்களை பரிசீலித்து அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவராக கலாநிதி கருணாரத்ன கொடிதுவக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஊவா மாகாண தேர்தல் குறித்து அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர். அங்கு தற்போது தேர்தல் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன. அங்கு தற்போது மக்களின் விருப்பு அரசுக்கு எதிராகவே காணப்படுகின்றது.
இதற்கு முன்னர் நடந்த மாகாண சபைத் தேர்தல்களின் போது அரசு யுத்த வெற்றியை விற்பனை செய்தது. ஆனால், இன்று அரசு பல் வேறு சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து சிக்கிக் கொண்டுள்ளது.
இன்று அரசுக்குள் பிளவுகள் ஏற்பட்டு உடைந்து வரும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் ஊவா தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்து பல்வேறு பொருட்களை வழங்கி வாக்குகளை பெற முயற்சிக்கின்றது.
இதேவேளை, டிபெண்டர் வாகனங்களை ஈடுபடுத்தி பீதியையும் ஏற்படுத்தி வருகின்றது. வன்முறையாளர்களின் வன்முறைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள்.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இன்று பாண் ஒரு இறாத்தல் 60 ரூபாவிற்கும் அதிகமாக ஒவ்வொரு விலையில் விற்பனையாகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply