சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் எமது கடற்படை வலுப்படுத்தப்படும் : கடற்படை முகாம் நிகழ்வில் ஜனாதிபதி

இலங்கைக்கு மட்டுமல்லாமல் இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு எதிர்கால த்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் கடற் படை வலுப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன் தினம் தெரிவித்தார்.கடற்படை அதிகாரிகள் பயிற்சியைப் பூர்த்தி செய்து வெளியேறுவோருக்கான வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திருமலை கடற் படை பயிற்சி முகாமில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ் வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறப்பிட்டார்.

ஜனாதிபதியின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ உட்பட்டோர் கடற்படை அதிகாரிகள் பயிற்சியைப் பூர்த்தி செய்து வெளியேறினர்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில், பயங்கரவாதிகள் கடந்த மூன்று தசாப்தங்க ளாகக் கனவு கண்ட ஈழ ராஜ்யத்தின் தலைநகராகக் கருதிய திருகோணமலை யிலிருந்து உங்கள் முன்பாக உரையாற்றுகிறேன். இந்த உரையின் ஊடாக, பிரிவி னைவாதத்தை அந்தக்கன விலிருந்து நாம் துரத்தியடி த்துவிட்டோம் என்பதை உலகிற்கு சொல்லிக்கொள்ளுகிறோம். இந்த பதிலையே இந்நாட்டு மக்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்தார்கள். இதுவே அவர்களின் எதிர்பார்ப்பாகவும், பிரார்த் தனையாகவும் இருந்தது. இதற்காக கடற்படையினர்

ஆற்றியுள்ள சேவை அளப்பரியது.

எமது நாடு கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இப்படியான நாட்டைப் பாதுகாப்பதற்கு மிகவும் வலுவான கடற்படை அத்தியாவசியமாகும். கடலின் ஆதிக்கம் எம்மால் தளர்த்தப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பமும் எமது தாயகத்தின் ஒருமைப்பாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது.

கள்ளக் கடத்தலில் முன்னர் ஈடுபட்ட குழுவொன்று தனியான ராஜ்ஜியமொன்றுக்கான உரிமையாளர்களாக கற்பனை செய்வதற்கு நாம் அன்று எமது கடற்படை குறித்து அதிக கவனம் செலுத்தாததே காரணமாகும்.

நாட்டின் மீது அன்பு இல்லாததன் காரணமாக எமது தாயகத்திற்குச் சொந்தமான கடற் பகுதியின் சுமார் மூன்றிலிரண்டு பகுதி திருமலை உட்பட சமாதான உயிலில் எழுதிக் கொடுக்கப்பட்டது. இதனால் எமது கடற்படை பாரிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்தது. எமது கடற்படையினரின் பலம் சரியான முறையில் மேம்படுத்தப்படாததால் தான் பயங்கரவாதிகள் கடலில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டது. என்றாலும் எமது கடற்படையினர் கடந்த மூன்று தசாப்தங்களாக உலகிலுள்ள மிக மோசமான பயங்கரவாதிகளுடன் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். எமது கடற்படையினரின் பயிற்சி மேம்படுத்தப்பட்டதன் பயனாக பயங்கரவாதி களின் கடல் ஆதிக்கம் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

ஆயிரக் கணக்கான படகுகளை விடவும் அர்ப்பணிப்பும், தைரியமும் மிக்க கடற்படை அதிகாரிகள் நாட்டுக்குப் பெறுமதியானவர்கள். இதன் பயனாகத்தான் எமது கடற்படையினர் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து எமது தாயகத்தைப் பாதுகாத்தனர்.

புலிகளிடமிருந்த சகல கப்பல்களையும் எமது கடற்படையினர் அழித்துவிட்டனர். பயங்கரவாதிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலைகள் பத்தை கடலின் தூரப்பகுதியில் வைத்து தாக்கி அழித்தார்கள்.

இவ்வாறான பாரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆயுத தளபாட ரீதியாக வலுவடைந்துள்ள நாடுகள் கூட எமது கடற்படைத் தளபதியை விஷேட பேச்சாளராக அழைத்திருக்கின்றன. உலகில் அதிக கடலாதிக்கத்தை இலங்கைப் பயங்கரவாதிகள் கொண்டிருந்தனர். நாம் இராணுவ ரீதியாக வெற்றிபெற்ற போதிலும் கடற்புலிகளின் தற்கொலைப் படையினருடன் போராடி வெற்றிபெற முடியாதென சிலர் எதிர்வு கூறினர். அந்தப் புலிகள் இப்போது எங்கே? இவ்வாறு தான் புலி மாயை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவற்றை எமது கடற்படையினர் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

பயங்கரவாதிகள் நவீன ஆயுதங்களையும், மற்றும் உபாயங்களையும் பயன்படுத்தித் தான் எமது படையினருடன் சண்டையிட்டனர். இறுதியில் அவர்கள் நீர்மூழ்கிகளைக் கூட நிர்மாணித்துக் கொண்டிருந்தார்கள். இச்சூழலில் எமது கடற்படையினர் பாரிய முன்னனு பவங்களைப் பெற்றுக்கொண்டதுடன் அவர்கள் ஆயுத ரீதியாகவும் வலுப்படுத்தப்படுகின்றனர். இதன் பயனாக எமது கடற்படையினர் பாரிய வெற்றிகள் பலவற்றை அடைந்திருக்கிறார்கள். இதன் பயனாக இனிமேல் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தப் போவது எமது கடற்படையினரே, கடற்புலிகள் அல்லர்.

புலிகள் பாடசாலை மாணவர்களை கடத்திச் சென்று தமது படையில் சேர்த்து அவர்களை தம்மைத் தாமே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு மாற்றி சிறிய படகுகளை பாவித்து எமது கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இப்படியான தற்கொலை படகுக ளுக்கு முகம்கொடுக்கும் யுத்த பிராந்தியம் உலகில் எங்கும் இல்லை. இருந்தும் எமது கடற்படையினர் புலிகளின் தற்கொலை பிரிவுக்கு முகம் கொடுக்கும் உபா யத்தை கண்டு பிடித்தனர். இதற்காக கடற்படையினர் படகுகளை உற்பத்தி செய்தனர். இதற்கு கடற்படை கப்பல்களை விடவும் பாரிய வரவேற்பு உலகில் கிடைத்தி ருக்கிறது. இப்போது எம்மிடமிருப்பது வலுவானதும், கெளரவமானதுமான கடற்படை, கடற்படையினருக்குத் தேவையான சகல உபகரண கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னா கொட உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply