அமெரிக்க போர் விமானங்கள் ஈராக்கில் தீவிரவாதிகள் மீது குண்டுவீச்சு
ஈராக்கில் முன்னேறி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தன்னாட்சி உரிமை பெற்றுள்ள குர்தீஷ்தானிலும் சில பகுதிகளை பிடித்து தங்கள் வசம் வைத்துள்ளன. அங்கு வாழும் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் மற்றும் யாஷிடி பூர்வீக குடிமக்களை வெளியேற்றினர்.மதம் மாற்ற வற்புறுத்தினர். மறுத்தவர்களை கும்பல் கும்பலாக கொன்று குவித்தனர். உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் சிஞ்சார் மலையில் தங்கினர். உணவு, தண்ணீரின்றி தவித்த பலர் செத்து மடிந்தனர்.எனவே அவர்களை காக்க அமெரிக்கா விமானங்கள் மூலம் அவர்களுக்கு உணவு, தண்ணீர், வீசியது மேலும் குர்தீஷ்தானில் தீவிரவாதிகளின் நிலை மீது குண்டு வீச்சு நடத்தி அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளது.
இதுவரை அங்கு 124 தடவை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியுள்ளன. இதனால் தீவிரவாதிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்தீஷ் படைகள் பல பகுதிகளை மீண்டும் மீட்டுள்ளனர். மொசூல் அணையும் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஆனால் அப்பகுதி முழுவதையும் மீட்க அமெரிக்க போர் விமானங்கள் தீவிரவாதிகள் மீது நேற்று குண்டு மழை பொழிந்தன. அதில், தீவிரவாதிகளின் 16 ஆயுத வாகனங்கள் அழிக்கப்பட்டன. பல வாகனங்கள் சேதம் அடைந்தன.
இந்த தகவலை அமெரிக்காவின் மத்திய கமாண்டர் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply