மீனவர்களின் படகுகளை விடுவிக்கவேண்டாம் என்று நான் கூறவே இல்லை: சுப்பிரமணிய சாமி
தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கைக்கு ஆலோசனை கூறியதாக பேட்டியளித்திருந்த பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி, தற்போது தான் அப்படிக் கூறவே இல்லை என்று பல்டி அடித்துள்ளார். “இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். அவர்கள் தொழிலாளர்கள். அதனால் விடுவித்துவிடுங்கள். ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள். அதை விடுவிக்க வேண்டாம் என்று சொன்னேன்.
அதைத்தான் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது என்று தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சாமி தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு தமிழகத்தில் மிகக்கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சு.சாமியின் கருத்தைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக சாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரண்டு போன சாமி, தான் மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் கூறவே இல்லை என்று பல்டி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply