உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரியாவின் மறு சீரமைப்புக்கு ஈரான் உதவி: அதிபர் அல்–ஆசாத் பாராட்டு
சிரியாவில் அதிபர் பஷார் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் மறு கட்டமைப்பு பணிகளுக்காக சுமார் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. சிரியாவின் முக்கியமான நட்பு நாடாக விளங்கி வரும் ஈரான், அங்கு நடக்கும் உள்நாட்டு போரை கட்டுப்படுத்துவதற்காக சிரியாவுக்கு உதவி வருகிறது. அந்தவகையில் சிரியாவின் மறு சீரமைப்பு பணிகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரு நாடுகளுக்குமான பொருளாதார முன்னேற்றக்குழு தலைவர் ரோஸ்டம் கசீமி தலைமையிலான குழுவினர் சிரியா சென்றுள்ளனர். இந்த குழுவை சந்தித்து பேசிய சிரிய அதிபர் அல்–ஆசாத், மறு சீரமைப்பு பணிகளுக்கு உதவி செய்யும் ஈரானுக்கு நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘சிரியாவின் மறு சீரமைப்புக்காக பிற நட்பு நாடுகளுடன், ஈரானும் உதவ முன்வந்திருப்பதை சிரிய மக்கள் வரவேற்கின்றனர்’ என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply