தென்மேற்கு சீனாவில் வெள்ளம்: 44 பேர் பலி-18 பேரை காணவில்லை

சீனாவின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தின் காரணமாக இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளனர். இதன் காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்ததுடன், விளைச்சலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சிவில் விவகாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. சிச்சுவானா மற்றும் குய்சொவ் ஆகிய மாகாணங்களில் கடந்த ஆகஸ்டு 31 முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள 42,000 வீடுகள் இடிந்து விழுந்ததுடன் சுமார் 1,21,700 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் அங்குள்ள மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1998 ஆம் ஆண்டு சீனாவில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கில் 4150 மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply