லெபனான் வீரர் தலை துண்டித்து படுகொலை: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறிச்செயல்

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப் ஆகியோரை இவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். பின்னர் இருவரையும் தலையை துண்டித்து கொலை செய்து விட்டனர்.

இந்த நிலையில் தற்போது அவர்கள் லெபனான் நாட்டைச் சேர்ந்த போர் வீரர் ஒருவரை தலையை துண்டித்து தங்கள் வெறிச்செயலை நிறைவேற்றியுள்ளனர். கடந்த மாதம் லெபனான் எல்லைப்பகுதியான ஆர்சால் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், லெபனான் படை வீரர்களுக்கும் இடையே கடும்சண்டை ஏற்பட்டது. அப்போது லெபனான் படை வீரர்கள் 19 பேரை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர்.

அவர்களில் அலி அல்–செய்யது என்பவரை கடந்த வாரம் தலையை துண்டித்து கொலை செய்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மற்றொரு வீரர் அப்பாஸ் மெட்லிஜ் என்பவர் தப்பி செல்ல முயற்சித்தபோது தீவிரவாதிகளால் தலையை துண்டித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply