நிகாராகுவா தலைநகரை தாக்கிய ராட்சத விண்கல்: 39 அடி பள்ளத்தை ஏற்படுத்தியது
லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நிகாராகுவா நாட்டின் தலைநகரான மனாகுவா நகரை இன்று ராட்சத விண்கல் ஒன்று தாக்கியது. அங்குள்ள விமான நிலையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தீப்பிழம்பாக விழுந்த இந்த விண்கல், சுமார் 39 அடி குறுக்களவு கொண்ட மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியது.
அது விழுந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், விண்கல் விழுந்த ஓசையும் அதிர்வும் மனாகுவா முழுவதும் உணரப்பட்டதாகவும், நிலநடுக்கத்தை அளவீடு செய்யும் கருவியிலும் அதன் தாக்கம் பதிவானதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
விண்கல் விழுந்த போது பலத்த அதிர்வும், அது விழுந்த ஓசை ஏற்படுத்திய அதிர்ச்சியில் அடுத்ததாக மிகப்பெரிய அதிர்வும் உணரப்பட்டதாகவும், அருகாமையில் விமான நிலையத்தில் இருந்த விமானங்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply