ஐ.எஸ்.ஐ.எஸ்., தலிபான் தலைவர்களின் தலைக்கு தலா ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ள இந்திய ஷியா இயக்கம்

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து அப்பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு என்று பெயரிட்டு அரசு அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் இந்தியாவில் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து அந்த இயக்கத்தில் சேர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிலும், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவிலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை அவர்கள் மூளைச்சலவை செய்து சேர்த்துள்ளதாக தெரிகிறது.இதுவரை 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன.

தேசிய புலனாய்வு நிறுவனத்தால் தேடப்படும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி ஒருவன் ஆன் லைனில் ஐ.எஸ்.ஐ.எஸ். பிரச்சார வீடியோவை வெளியிட்டு இந்தியாவில் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை சேர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அல்-கொய்தாவின் கிளை தொடங்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவன் அய்மான்-அல்-ஜவாஹிரி சமீபத்தில் மிரட்டல் விடுத்துள்ளான். இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தனிப்பிரிவு தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் சில தேசத்துரோகிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்ர் பக்தாதி, அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அல்-ஜவாஹிரி, ஜமாத்-உ-தாவா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத், தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா உமர் மற்றும் ஹர்க்கத்-உல்-முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அசார் மசூத் ஆகியோரின் தலைகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயங்கிவரும் ஷியா அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக லக்னோவில் பேட்டியளித்த இந்திய ஷியா ஹுசைனி நிதியத்தின் பொதுச் செயலாளர் சையெத் ஹஸன் மெஹ்டி, ’இந்தியாவில் சுமார் 5 கோடி முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மனிதநேயத்தையும், அனைத்து மதங்களை சேர்ந்த அப்பாவி மக்களையும் படுகொலை செய்யும் மேற்கண்ட தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர்கள்.

இவர்களைக் கொன்று, தலைகளை கொண்டு வருபவர்களுக்கு தலா ஒரு கோடி பரிசு அளிக்கப்படும் என்று லக்னோ, ஐதராபாத், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுவரொட்டி வெளியிட இந்திய ஷியா ஹுசைனி நிதியம் ஒருமனதாக தீர்மானித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply