டேவிட் கேமரூன் தலையை வெட்ட வேண்டும்: பெண் ஐ.எஸ்.ஜிகாதி வெறி

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தலையை ஒரே வெட்டாக வெட்ட வேண்டும் என்று கூறி அந்நாட்டை சேர்ந்த 18 வயதே ஆன ஐ.எஸ். இயக்க பெண் ஜிகாதி தனது வெறியை வெளிப்படுத்தியுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப் ஆகியோரை இவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். பின்னர் இருவரையும் தலையை துண்டித்து கொலை செய்து விட்டனர். இதற்கிடையே அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவை தலை துண்டித்து கொலை செய்தது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜிகாதி ஜான் என்று புதிய தகவல்கள் வெளியாகியது.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பலர் சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து போரிடுகின்றனர். இந்நிலையில் ஜிகாதிகள் திரும்பி நாட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்று அந்நாட்டு அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராட நேட்டோ படை தயாராகி வருகிறது. இதற்கிடையே குர்ஷித் படைக்கு இங்கிலாந்து ராணுவ தளவாடங்களை அனுப்பியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க பத்திரிக்கையாளரை கொலை செய்த இங்கிலாந்து ஜிகாதி ஜானின் கூட்டாளிகளை கைது செய்ய அவர்களை அமெரிக்க புலனாய்வு படை நெருங்கியுள்ளது.

தற்போது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தலையை ஒரே வெட்டாக வெட்ட வேண்டும் என்று பெண் ஜிகாதி தனது வெறியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் பெண் ஜிகாதியின் டூவிட்டரில் வெளியாகியுள்ளது என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. 18 வயதே ஆன அந்த பெண் ஜிகாதி இஸ்லாமியர்களுக்கு எதிரான டேவிட் கேமரூன் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எங்களுக்கு குரியுரிமை பறிக்கப்பட்டது குறித்து நான் கவலை கொள்ளவில்லை ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் பொறுத்துக் கொள்ள மாட்டேன். டேவிட் மேரூன் தலையை வெட்டுவேன். என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அந்த பெண் ஜிகாதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள சிரியாவின் ராக்கா நகரில் உள்ளார். என்று நம்பப்படுகிறது. இங்கிலாந்து பெண்கள் சிரியாவில் தீவிரவாத இயக்கத்தில் இணைவது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து பள்ளி சகோதரிகளான சல்மா மற்றும் ஷக்ரா ஹெலன் சிரியாவிற்கு தப்பிய பின்னர், பெண் ஜிகாதியின் டூவிட்டர் கணக்கு கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply