பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவுப் பார்த்த இலங்கையர் கைது
பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவுப் பார்த்த இலங்கை நபரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.’ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்’ (நிகழ்ச்சிகளுக்கான மேடை உள்ளிட்ட வசதிகளை செய்து தருதல்) என்ற போர்வையில் இந்திய அரசுக்கு சொந்தமான சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் ஊடுருவி, அங்குள்ள ரகசியங்களை உளவறிந்து, இண்டெர்நெட் மூலமாக பாகிஸ்தானுக்கு தகவல் அளித்து வந்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராஜன் என்ற அந்நபரை கைது செய்த தேசிய புலனாய்வு அமைப்பினர், அவனிடமிருந்து சில முக்கிய ரகசிய தகவல்களையும், இந்தியாவுக்கு ஒன்று, இலங்கைக்கு ஒன்று என அவன் வைத்திருந்த 2 பாஸ்போர்ட்களையும் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் பணியாற்றும் ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் கடலோர காவல்படை மற்றும் ராணுவப் பயிற்சிக் கழகம் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மேடை அமைத்து தரும் போர்வையில் அவர் உளவறிந்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்து வந்துள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிடிபட்ட அருண் செல்வராஜன் மீது இலங்கையில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அந்நாட்டின் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply