அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதிகளை கண்டுபிடித்து அழிப்போம்: ஒபாமா
ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் 2 அமெரிக்க நிருபர்களை தலை துண்டித்து கொலை செய்தனர். இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இது சம்பந்தமாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று டெலிவிஷனில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் எந்த தீவிரவாதிகளும் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என கருதிவிட வேண்டாம். அவர்கள் எங்கு மறைந்திருந்தாலும் தேடி பிடித்து அழிப்போம்.
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு பல நாடுகளும் முன் வந்துள்ளன. அவர்களுக்கு அமெரிக்கா தலைமை தாங்கி தாக்குதலை தொடுக்கும். ஈராக்கில் மட்டுமல்லாமல் சிரியாவில் தமது தாக்குதல்கள் நடத்தப்படும். அதே நேரத்தில் மீண்டும் ஒரு தரைப்போரை நடத்த விரும்பவில்லை.
எனவே ஈராக் படைகளுக்கு உதவும் வகையிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் வகையிலும் வான்வழி தாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்படும். இது ஏற்கெனவே நடந்த ஈராக் போர் போன்றதல்ல. வேறு மாதிரியான போராக இருக்கும்.
தமது நாட்டுக்கு எந்தவிதமான அச்சுறுத்தல் வந்தாலும் அதை தடுத்து நிறுத்துவோம். அமெரிக்கா நடத்த வேண்டிய தாக்குதலுக்கு அனுமதி அளித்த பாராளுமன்றத்துக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நமது சொந்த மக்களை காப்பாற்றுவதற்கும் மனித உரிமை அமைப்புகளை பாதுகாப்பதற்கும் இந்த தாக்குதலை நாங்கள் தொடங்க உள்ளோம்.
அதே நேரத்தில் சிரியாவை பொறுத்தவரை அரசுக்கு எதிரான ஐ.எஸ். அல்லாத படைகளை ஊக்கப்படுத்த அமெரிக்கா தேவையான உதவிகளை செய்யும். ஈராக்கிற்கு மேலும் 475 வீரர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply