நாட்டின் பொருளாதார அபிவிருத்திகளுக்கு ஏற்ப இளையோரை உருவாக்குவதே அரசின் நோக்கம் : ஜனாதிபதி
நாடு பொருளாதாரத்தில் கட்டியெழுப் பப்பட்டு வரும் யுகத்தில் அதற்கேற்ப இளைய தலைமுறையினரை உருவாக் குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அதற்கிணங்கவே தகவல் தொழில்நுட்ப பீடங்களையும் மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடங்களையும் நிர்மாணித்து வருவதாகவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கில மொழிக்கான ஆசிரியர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய விசேட திட்டமொன்றை நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பதுளை மாவட்டத்தில் மீகஹகிவுல பாடசாலைக்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்கள் கிராமப்புற பாடசாலைகளுக்கு நாம் பெற்றுக்கொடுத்து வருகிறோம். இதன் பெறுமதி பிரயோசனங்கள் மிக விசாலமானது. பதுளை பிரதேசம் அபிவிருத்திகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோம்.
இப்பிரதேசங்களிலுள்ள ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பதுளை நகருக்கும் போயுள்ளனர். அவர்களது நியமனமும் பெயரும் கிராம பாடசாலைகளில் உள்ளபோது, சம்பளத்தை இங்கு பெற்றுக்கொண்டு நகரில் பணிபுரிகின்றனர். இது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு ஒரு அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.
புதிதாக கல்வி வலயம் ஒன்று ஏற்படுத்தப்படுமானால் அது இந்த வலயமாகத் தான் அமையவேண்டும். கிராமிய பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி கிட்டவேண்டும் என்ற நோக்கிலேயே நாம் இதனைக் குறிப்பிடுகின்றோம். அதன் பின்பு ஆசிரியர்களுக்கு இங்கு தங்கி சிறந்த கல்வியை வழங்க தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க முடியும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாணவர்கள் 17 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற நீதியில் கடமையில் உள்ள போதும் இங்கு பதுளை மாவட்டத்தில் 14 பேருக்கு ஒருவர் என்ற அளவில் ஆசிரியர்கள் அதிகமாகவே உள்ளனர்.
எனினும் விஞ்ஞானம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் குறைபாடு உள்ளதாக அறிய முடிகிறது. நாம் இது தொடர்பில் புதிய வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். கணிதம் தொடர்பில் எமது மாணவர்களுக்கு ஒரு பயம் உள்ளது. இதற்கு வசதியாகவே நாம் மஹிந்தோதய ஆய்வு கூடத்தில் கணிதப் பயிற்சிக் கூடங்களையும் இணைத்துள்ளோம்.
விஞ்ஞானம், கணிதம், மொழி ஆகியவற்றை பிள்ளைகளுக்கு மிக நெருக்கமாக்கவும் தொழில்நுட்ப அறிவைப் பெருக்கவுமே இத்தகைய மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடங்கள் நிறுவப் படுகின்றன.
பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வரும் இந்த யுகத்தில் அதற்குப் பொருத்தமானவர்களை உருவாக்குவது அவசியமாகும். அதற்காக எமது பிள்ளை களை நாம் தயார்படுத்த வேண்டியுள்ளது. இதற்கிணங்க இதுபோன்ற பாடசாலை களை ‘ஏ’ தர பாடசாலைகளையும் விட வசதிகளைக் கொண்ட பாடசாலை களாக நாம் உருவாக்கி வருகின்றோம். கொழும்பில் உயர்மட்ட பாடசாலைகளுக்கு நாம் மஹிந்தோய ஆய்வுகூடங்களை வழங்கவில்லை.
கொழும்பு விஷாகா வித்தியாலயத்திற்கோ ஆனந்தா கல்லூரிக்கோ கிடைக்காத வசதிகளை நாம் கிராமியப்புற பாடசாலை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுத்து வருகிறோம். எமது வரலாற்றில் மன்னர்கள் சீகிரிய, பராக்கிரம சமுத்திரம் போன்ற பாரிய நிர்மாணங்களை மேற்கொண்டுள் ளனர். எம்மவர்களுக்கு அதற்கான அறி வும் பலமும் இருந்துள்ளது. அதனால் அவர்களினால் இத்தகைய மாபெரும் நிர்மாணிப்புகளை மேற்கொள்ள முடிந்துள் ளது. எமது முன்னோர்களுக்கு இத்தகைய அறிவும் பலமும் இருந்துள்ளதென்றால் எமது இளைய பரம்பரையினருக்கும் நிச்சயம் அந்த திறமை இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
கால்பந்தாட்ட தேசிய அணிக்கு இந்த வித்தியாலயத்திலிருந்து இருவர் சென்றுள்ளனர் என்பது மகிழ்ச்சி தரும் விடயம். இது உங்களுக்கு மட்டுமன்றி எமக்கும் பெருமையளிக்கும் விடயமாகும். சிறு விடயங்களுக்கும் தற்கொலை செய்துகொள்கின்ற இன்றைய யுகத்தில் சமூகத்திற்கு முகம்கொடுக்கும் துணிவும் மனப்பக்குவமும் பாடசாலைகள் மூலம் கிடைப்பது உறுதி செய்யப்பட வெண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply