இலங்கை வரும் சீன ஜனாதிபதிக்கு நாளை செங்கம்பள வரவேற்பு விமான நிலையத்தில் ஜனாதிபதி வரவேற்பார்
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஹிஜின் பிங் நாளை (16) இலங்கைக்கு வருகை தருகிறார். இவருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருப்பதோடு சீன ஜனாதிபதியையும் பாரியாரையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரவேற்று அழைத்து வர இருப்பதாக ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் அநுராதா ஹேரத் தெரி வித்தார்.
28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரின் விஜயத்துடன் இரு நாடுகளுக்குமிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்தி டப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 2ஆம் 3 ஆம் கட்டங்கள் சீன மற்றும் இலங்கை ஜனாதிபதிகளினால் நாளை திறந்துவைக்கப்பட உள்ளன. மின் சக்தி தொடர்பில் இரு நாடுகளுக்கு மிடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட இருப்பதாக மின்சார சபை தெரிவித்தது.
மின்சக்தி அமைச்சுடன் ஒரு ஒப்பந்தமும் மின்சார சபையுடன் ஒரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளன. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 2 ஆம் 3 ஆம் கட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதோடு தேசிய மின் கட்டமைப்புடன் மொத்தமாக 900 மெகா வோர்ட் மின்சாரம் இணைக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இருந்தே இரு நாட்டு தலைவர்களும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை திறந்து வைக்க உள்ளனர்.
சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின்போது 500 ஏக்கர் துறைமுக நகரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இடம்பெறும். இந்த திட்டம் 1400 மில்லியன் அமெரிக்க டொலர் சீன கடனுதவியுடன் முன்னெடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட இருப்பதாக துறைமுக, நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்தது. கடலை நிரப்பி காலிமுகத்திடலுக்கு அப்பால் இந்த துறைமுக நகரம் உருவாக்கப்பட இருப்பதோடு சைனா கொன்ஸ்ட்ரக்சன் கொமுயுனிகேசன் கம்பனி பிரதான முதலீடு மேற்கொள்கிறது.
சீன ஜனாதிபதி இங்கு தங்கியிருக்கும் இரு நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் டி. எம். ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்திகிறார். இதேவேளை சீன ஜனாதி பதியின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வாய்ப்பு இருப்பதாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply