பணிமாற்றத்திற்கு எதிர்ப்பு: ஏர் பிரான்ஸ் விமானிகளின் ஸ்டிரைக் தொடங்கியது
பட்ஜெட் விமான நிறுவனங்களாலும், அரச குடும்பங்களின் ஆதரவு கொண்ட வளைகுடா விமான நிறுவனங்களாலும் ஐரோப்பாவில் இயங்கும் பல விமான நிறுவனங்கள் தொழில்முறைப் போட்டிகளை எதிர்கொண்டு வருகின்றன. இப்போட்டிகளை சமாளிக்கும்விதமாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் தங்களின் பெரும்பாலான விமான சேவைகளை குறைந்த கட்டண நிறுவனமான டிரான்ஸ்அவியாவிற்கு மாற்ற இருப்பதாகத் தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து தங்களின் பணிகளும் மாற்றப்படுவதை எதிர்த்து ஏர் பிரான்ஸ் விமானிகள் தங்களின் ஒரு வார கால வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் 50 சதவிகிதத்திற்கும் குறைவான விமானங்களே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ள இந்நிறுவனம், உலகம் முழுவதிலும் உள்ள தங்களின் பயணிகளை அவர்களுடைய பயணத் தேதிகளை மாற்றிக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தினால் நாள்தோறும் 10 முதல் 15 மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்படும் என்று ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான பிரடெரிக் ககே தெரிவித்தார். டிரான்ஸ்அவியாவில் பணி புரிய சம்மதிக்கும் விமானிகளுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் கிடைக்கும் நன்மைகள் குறித்த பேச்சுவார்த்தை ஏற்றுக்கொள்ளப்படும் என்று இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் டிரான்ஸ்அவியாவில் பணிபுரியும் விமானிகள் தொழிற்சங்கத்தின் கீழ் முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் ஏர் பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவன விமானிகளும் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் நாளை எட்டு மணி நேர வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களாகவே ஆரம்பகட்ட ஒய்வு விதிமுறைகள் குறித்து இவர்களும், இந்நாட்டின் குறைந்த கட்டண நிறுவனமான ஜெர்மன்விங்சின் வர்த்தகம் சார்ந்த வேலை நிறுத்தங்களும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply