வட மாகாண முதலமைச்சர் அரசுடன் ஒத்துழைக்காததால் வடக்;கு மக்கள் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர் : கோட்டாபய ராஜபக்ஷ

வட மாகாண முதலமைச்சர் அரசுடன் ஒத்துழைத்து செயற்படுவதில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் கஷ்டத்தை அனுபவிப்பதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலுக்கு அப்பால் செயற்படும் போதே மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு மாநகர சபையின் மேயர் எதிர்க் கட்சியாக இருந்த போதிலும் மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார். இதன் காரணமாக கொழும்பை அபிவி ருத்தி செய்யவும் பாரிய மாற்றத்தை ஏற்ப டுத்தவும் முடிந்தது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் வாழ்விட அமைப்பும் (ஹெபிடாட்) இலங்கையின் நகர அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து அவுஸ்திரேலிய எய்ட்டின் அனுசரணை யுடன் “நகர மீளெழுச்சி” என்ற தொனி ப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த செயலமர்வு பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜில் நேற்று இடம் பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் உரையாற் றுகையில்:

இந்த யுகத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிர தேச நகரம் பாரிய எழுச்சியைக் கண்டுள்ளது. மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதிலிருந்து தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம். பொருளாதாரம் போன்றவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள மக்கள் நகரமயமாக்கல், நகர அபிவிருத்தியினை உச்சகட்டமாக அனுபவித்து வருகின்றனர். 2020 இலங்கையில் மக்களின் தொகை மேலும் அதிகரிக்கலாம். இந்நிலையில் இந்த நகர எழுச்சித்திட்டம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

எமது நாட்டின் கொழும்பு உட்பட அதனை அண்மித்த பிரதான நகர் பகுதிகள் மழை மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக நீரில் மூழ்கியது. பாராளுமன்றம் கூட நீரில் மூழ்கியது. இதனை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு உலக வங்கியின் உதவியுடன் கொழும்பு நகர்ப்புற அபிவிருத்தி வேலைத்திட்டத்தை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்தது. இதன் பயனாக தற்பொழுது கொழும்பு நகர் நீரில் மூழ்குவதில்லை. கால்வாய்கள், பேர வாவிகள், வடிகான்கள் முழுமையாக புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அழகிய தோற்றத்தில் கொழும்பு காட்சியளிக்கின்றது.

கொழும்பை போன்று காலி, மாத்தறை, நுவரெலியா, நகரங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்டி, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு சுகாதாரமான, சொகுசு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும். வெகு விரைவில் சேரிகளற்ற நிலைமை உருவாக்கப்படும். நாங்கள் எதிர்காலத்தில் ஸ்மார்ட் (ஷிசீart) நகரம் என்ற எண்ணக்கருவிற்கு செல்ல வேண்டும். அதனை அடைவதற்கே எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று சில சந்தர்ப்பங்களில் துரதிஷ்டவசமாக அரசியல் மற்றும் அரசியல் மாற்றம் காரணமாக சிலர் ஒத்துழைப்பதில்லை. மாறாக கொழு ம்பு மாநகர சபையை நாம் முன் னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். ஏனெனில், கொழும்பு மாநகர சபையை எதிர்க் கட்சி யினரே ஆள்கின்றனர். என்றாலும் மேயர் உட்பட சகல தரப்பினரும் மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சுக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார். இதன் காரணமாக கொழும்பை அபிவிருத்தி செய்யவும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவும் முடிந்தது.

வட மாகாண முதலமைச்சர் அரசுடன் ஒத்துழைப்பதில்லை. இதனால் அங்கு ள்ள மக்களே பாதிக்கப்படுகின்றனர் என் றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமல் பெரேரா, ஐக்கிய நாடுகள் ஹெபிடாட் அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அலுவலகத்தின் சிரேஷ்ட மக்கள் குடியமர்வு அதிகாரி ஸ்ரீனிவாசன் போபுரி, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் விலி மென்டிஸ், ஐ. நா. ஹெபிடாட் அமைப்பின் தேசிய திட்ட முகாமையாளர் இந்து வீரசூரி உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply