பயங்கரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட மாட்டாது:கெஹலிய ரம்புக்வெல்ல

பயங்கரவாத அமைப்பொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் மட்டுமே இணக்கப்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய அனைவரைவிடவும் தமிழ்ச் சிவிலியன்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

என்ன விலை கொடுத்தேனும் தமிழ்ச் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளே நன்மை அடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் காணப்படும் சகல வளங்களைப் பயன்படுத்தி தேவையானவு சிவிலியன்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply