கருணா அம்மான் தலைமையில் 2000 பேரைக் கொண்ட குழுவொன்று இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான 2000 பேரைக் கொண்ட குழுவொன்று இன்று (மார். 9) மாலை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரே அலரிமாளிகையில் இன்று இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வற்கான திட்டங்கள் தொழில் வாய்ப்புக்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply