`சமாதானமே வடக்கின் இலங்கைத் தமிழ் மக்களுக்கு வசந்தத்தை உருவாக்கும்`
மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது மஹிந்த சிந்தனை தேசியப் புனர்வாழ்வு வேலைத் திட்டத்திற்கு அமைவாகப் பிரியாத நாட்டிற்குள் கௌரவமான சமாதானத்தின் மூலம் வடக்கின் இலங்கைத் தமிழ்மக்களுக்கு வசந்தத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஏ-9 தரைப் பாதை ஊடாக வடக்கிற்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கும் ஆரம்ப வைபவம் இன்றைய தினம் (மார். 9) காலை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், வடமாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களது இவ்வேலைத் திட்டத்தின் மூலம் வடக்கு மக்களுக்கு வசந்தம் உருவாகின்றது என்றும் ஏ-9 தரைப் பாதையைப் பயங்கரவாதப் புலித் தலைமையிடம் இருந்து மீட்பதில் பாதுகாப்புப் படையினர் பாரிய முயற்சியினை முன்னெடுத்தமைக்காக யாழ். குடா நாட்டு மக்கள் சார்பாகப் படையினருக்குத் தான் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஏ-9 தரைப் பாதை திறப்பானது யாழ். குடா நாட்டு மக்களுக்குச் சொர்க்கத்தின் வாசல் திறக்கப்பட்டதிற்கு ஒப்பானது என்றும் புலித் தலைமையின் வலிந்து கட்டிய யுத்தம் காரணமாக இதுவரையில் ஏ- 9 தரைப் பாதை மூடப்பட்டிருந்ததால் யாழ். குடா நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கடல் மார்க்கமாகவே கொண்டு செல்லப்பட்டது என்றும் அரசாங்கம் முழு முயற்சி எடுத்துப் பொருட்களை இயலுமான அளவு அனுப்பி வந்த போதிலும், குடா நாட்டில் பொருட்களுக்கான தட்டுப்பாடும், நியாய விலையில் பொருட்கள் கிடைக்காத நிலையும் காணப்பட்டது என்றும், தற்போது ஏ-9 தரைப் பாதை ஊடாகப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதால் யாழ். குடா நாட்டு மக்களுக்கு இது பெரிதும் நன்மையாக அமையும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply