ஐதேக ஆட்சிக்கு வந்தால் சஜித் பிரேமதாஸவே அடுத்த பிரதமர்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மேலும் சில எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. ஏனைய கட்சிகளுடன் ஐதேக பேச்சுவார்த்தை நடத்தி வருவதை ஐதேகவின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.எதிர்வரும் வாரங்களிலும் ஐதேக வேறு சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவே பிரதமர் என ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் தொகுதி கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற யோசனையை தான் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்க உள்ளதாக ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply