ஐ.எஸ். போராளிகளுக்கு எதிராக குர்திஷ் பெண் தற்கொலைக் குண்டுதாரி தாக்குதல்
சிரியாவின் கொபேன் நகருக்குள் ஐ.எஸ். போராளிகள் திங்கட்கிழமை ஊடுருவ முயற்சித்ததையடுத்து அவர்களுக்கும் குர்திஷ் படையினருக்குமிடையே உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் போராளிகளிடமிருந்து அந்நகரை பாதுகாக்கும் முயற்சியில் குர்திஷ் இனத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார். கொபென் நகருக்கு அண்மையிலுள்ள மிஷ்ரினுர் குன்றின் ஒரு பகுதியை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் போராளிகள் மேலும் முன்னேறுவதை தடுக்கும் முயற்சியில் பிராந்திய குர்திஷ் படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதுதொடர்பில் சிரிய குர்திஷ் அதிகாரியான இட்றிஸ் நஹ்ஸென் விபரிக்கையில்,
தரையிலுள்ள குர்திஷ் படையினருக்கும் வான் தாக்குதல்களை நடத்திவரும் கூட்டமைப்பு நாடுகளின் படையினருக்குமிடையே எதுவித ஒருங்கிணைப்பும் இல்லாதுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் தமது பிராந்தியத்தை பாதுகாக்கும் முகமாக குர்திஷ் படையைச் சேர்ந்த பெண்தற்கொலை குண்டுதாரியொருவர் தாக்குதலை நடத்தியுள்ளார்.
குர்திஷ் படைத்தரப்பில் இவ்வாறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
கொபேனில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதல்களின் குறைந்தது 19 குர்திஷ் படைவீரர்களும் 27 ஐ.எஸ் போராளிகளும் உயிரிழந்துள்ளதாக குர்திஷ் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply