ஜெயலலிதாவின் ஜாமின் மனு நிராகரிப்பு ஏமாற்றமளிக்கிறது: ராம் ஜெத்மலானி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 வருட சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று நீதிபதி சந்திரசேகரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார்.ஜெயலலிதாவிற்கு 66 வயதாகிறது என்றும், அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளது எனவும் வாதிட்ட ஜெத்மலானி, உச்சநீதிமன்றம் லாலுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியதை முன்மாதிரியாக கொண்டு ஜெயலலிதாவையும் ஜாமினில் விடுதலை செய்யவேண்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞரும் ஜெயலலிதாவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கலாம் என்று தெரிவித்தார். ஆனால், ஜாமின் மனுவை நிராகரித்து நீதிபதி சந்திரசேகரா உத்தரவிட்டார்.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ராம் ஜெத்மலானி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு ஏமாற்றமளிப்பதாக கூறியிருக்கிறார். மேலும் உச்சநீதிமன்றத்தில் எப்போது, எவ்வாறு முறையிடுவது என்று தனது கட்சிக்காரர் முடிவு செய்வார் என ஜெத்மலானி கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply