இலங்கையில் போர் நிறுத்தம் கோரி ஜெயலலிதா உண்ணாவிரதம்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதையொட்டி பலத்த பொலிஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரத மேடையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா முதலில் அதில் பணம் போட்டு நிதி திரட்டுவதைத் தொடங்கி வைத்தார். மேலும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

அதேவேளை ஜெயலலிதாவின் உ ணாவிரத போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் வரவேற்ற்றுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா மேற்கொள்ளும் உண்ணாவிரதம் குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியின்,” தமிழ்நாட்டில் அ.தி.மு.க. முதன்மையான அரசியல் சக்தியாக திகழ்ந்து வருகிறது. அதை வழி நடத்தி வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மிக ஆறுதலாக இருக்கும். அது மட்டுமின்றி ஈழத்தமிழர்கள் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த உண்ணாவிரதம் உதவும்.சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம்,ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்துக்கு நிச்சயம் வலுச்சேர்க்கும்.” என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஜெயலலிதா மேற்கொண்டு வரும் இவ் உண்ணா விரத போராட்டத்தினை டாக்டர் ராமதாஸ் அங்கு சென்று முடித்து வைக்கவுள்ளதாக நம்பப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply