மூன்று தடவையல்ல பத்து முறை என்றாலும் மக்கள் மஹிந்தவையே தெரிவு செய்வர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப்போட்டியிட அச்சம் கொண்டிருப்பவர்களே, மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிட முடியாது என வெற்று வார்த்தைகளை கூறி வருகின்றனர். இது குறித்து நாம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர் மூன்றாவது தடவையல்ல பத்து தடவைகள் போட்டியிட்டாலும் மக்கள் மஹிந்தவையே தெரிவு செய்வர் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கண்டி – கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்தும் அறிந்தும் கொண்ட சிலரே அவ்வாறு வெற்று வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு ஜனாதிபதி தேர்தல்களுடன் 29 தேர்தல்களில் தோல்விகளைக்கண்டு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகிவரும் அவர்கள் எவ்வித சுய கௌரவமற்றவர்கள் எல்லாத் தேர்தல்களிலும் சிறந்த வெற்றிகளைக் கண்ட மகிந்த ராஜபக்ஷவுடன் போட்டியிட அச்சம்கொண்ட ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என கூறிவருகின்றனர்.
வெளிநாட்டு சக்திகளின் கைம்பொம்மைகளாக செயற்பட்டு அவர்களின் தேவைக்கேற்ப தலைவரை கொண்டு வருவதற்கு சதிகள் இடம்பெற்று வருகின்றது. சிலர் அதில் பிரதிநிதிகளாக செயல்பட்டுவருகின்றனர்.
மூன்றாவது தடவையல்ல பத்து தடவை போட்டியிட்டாலும் நாட்டின் தலைவரை தெரிவு செய்வது மக்களின் வாக்குகளாகும். எனவே, மக்களின் வாக்குப்பலம் எந்தக் குழுக்களுக்கும் கிடையாது அவற்றை பெறக்கூடிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ஷவே என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply