சிறையில் ஜெயலலிதாவுக்கு எந்த பணியும் வழங்கவில்லை: டி.ஜி.பி. ககன்தீப் தகவல்

சொத்துகுவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதியில் இருந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதாவை பார்க்க தினமும் தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள். பிரமுகர்கள் பெங்களூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அமைச்சர்கள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்று ஜெயலலிதா கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர்கள் யாரும் பெங்களூருக்கு வருவதில்லை.

இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு சிறை நிர்வாகம் ஊதுபத்தி தயாரிக்கும் பணி வழங்கியதாக தகவல்கள் வெளியானது.

இதுபற்றி கர்நாடக மாநில சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ககன்தீப்பிடம் கேட்டபோது,

ஜெயலலிதாவுக்கு சிறையில் பணி எதுவும் வழங்கவில்லை. அவரை பணியில் ஈடுபடுத்தி இருப்பதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது. யாரோ சிலர் சொல்வதை கேட்டு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். அவரை 24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். அவருடைய உடல் நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply