திருமணத் தகுதியை மறைத்த விவகாரம்: மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் மறுப்பு

திருமணம் ஆன விபரத்தை வேட்பு மனுவில் மறைத்த நரேந்திர மோடிக்கு நோட்டீஸ் அனுப்பக் கோரிய ஆம் ஆத்மி உறுப்பினரின் மனுவை அகமதாபாத் மாவட்ட நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2012-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலின்போது வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்ட தன்னைப் பற்றிய சுயவிபர பிரமாணப்பத்திரங்களில் ’திருமணமானவரா?’ என்ற கட்டத்தில் ஏதும் குறிப்பிடாத நரேந்திர மோடி, கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மட்டும் ’திருமணம் ஆனவர்’ என்று கூறியிருந்தது உண்மையை மறைத்த குற்றச் செயலுக்கு ஒப்பானதாகும்.எனவே, குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது இந்த உண்மையை மறைத்த மோடி மற்றும் அவரது வேட்பு மனுவினை ஏற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மோடிக்கும் மணிநகர் தொகுதி தேர்தல் அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிஷாந்த் வர்மா என்பவர் அகமதாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் தொடரப்படும் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் ஒருவர் மிது குற்றம் நிகழ்ந்த ஓராண்டு காலத்துக்குள்ளாக மட்டுமே வழக்கு தொடர முடியும். இந்நிலையில், காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவினை விசாரணைக்கு ஏற்று, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்று அம்மனுவினை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, அகமதாபாத் மாவட்ட முதல்நிலை கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நிஷாந்த் வர்மாவின் வக்கீல் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

மாஜிஸ்திரேட் கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து, மோடிக்கும் தேர்தல் அதிகாரிக்கும் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி, மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டும்
என அம்மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கனவே மனுதாரர் வழக்கு தொடர்ந்த மாஜிஸ்திரேட் நீதி மன்றம், இவ்விவகாரம் தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டம் 204-ன் கீழ் நடவடிக்கையை தொடங்காத நிலையில் மோடிக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தன்னால் நோட்டீஸ் அனுப்ப முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply