25 வருடங்களின் பின் யாழ்ப்பாணத்திற்கு தனது பயணத்தை மேற்கொள்ளும் யாழ்தேவி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவி ரயில் சேவையை தொடக்கி வைப்பதுடன் அங்கு பல அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய அரசாங்க அதிபரின் பணிமனையான மாவட்ட செயலகத்தை திறந்து வைப்பதுடன் அங்கு தனது தலைமையில் வடமாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தையும் நடத்தி வைக்கிறார். அதேசமயம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருபதாயிரம் பேர் காணி உரிமைக்கான பத்திரங்களை ஜனாதிபதி அவர்களின் கரங்களால் பெற்றுக்கொள்ளவுள்ளனர். காணிப் பிரச்சினையை எதிர்நோக்கி வந்த கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு இதன் மூலம் விடிவு கிடைக்கவுள்ளது. அதுமாத்திரமன்றி கிளிநொச்சியில் அன்றைய தினம் பல பாடசாலைகளில் மஹிந்தோதய ஆய்வு கூடங்களும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

அதேபோன்று வடக்கிலும் பல பாடசாலைகளில் மஹிந்தோதய ஆய்வு கூடங்களும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை ஆரம்ப நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட செயலக திறப்பு விழா,காணி உறுதி வழங்கும் நிகழ்வு, மஹிந்தோய ஆய்வு கூடத் திறப்பு விழா, அரசாங்க அதிகாரிகளான வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான இலகு கடன் அடிப்படையிலான மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு ஆகியன உட்பட மேலும் பல நிகழ்வுகளிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருக்கிறார். ஜனாதிபதியின் வட மாகாண விஜயமானது அங்கு வாழ்கின்ற மக்களுக்கு பெரும் நன்மைகளை அளிக்கப்போகின்றதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

25 வருடங்களின் பின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பாலம் அதாவது கொழும்பு யாழ்ப்பாணம் தொடுக்கும் யாழ்தேவி புகையிரதம் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகி வடக்கு தெற்கு மக்களது ஐக்கியம் மற்றும் பொருளாதாரம் போக்குவரத்துச் சேவை மீளவும் வலுப்பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply