ஜனாதிபதியின் யாழ்.நிகழ்வுகளை த.தே.கூட்டமைப்புப் புறக்கணிப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்  யாழ். நிகழ்வுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணம் கொழும்புக்கு இடையிலான யாழ்தேவியின் சேவைகளை ஆரம்பித்து வைத்துள்ளார். இதன்போது யாழ்.புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண முதலமைச்சரும், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. இதேபோல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற வடமாகாண அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வுக் குழுக் கூட்டத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது.

யாழில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் ஏனைய நிகழ்வுகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வடக்கிற்கான விஜயத்தின் போது இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா அறிவித்திருந்தார். இதேபோல் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தம்மால் கலந்துகொள்ள முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply