ஹைதராபாத்தில் ஒருநாள் பொலிஸ் ஆணையாளரான 10 வயது சிறுவன்
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 10 வயது சிறுவனின் பொலிஸ் ஆணையாளராக வேண்டும் என்ற ஆசையை ஹைதராபாத் பொலிஸ் ஆணையாளர் மகேந்திரரெட்டி நிறைவேற்றியுள்ளார். எல்லோரது மணதையும் நெகிழவைத்த இந்த சம்பவம் ஹைதராபாத் பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. நான் படித்து பட்டம் பெற்று பொலிஸ் ஆணையாளராக வரவேண்டும் என்பதே எனது கனவு என்று அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். சாதிக் என்ற 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றுவதற்கு பொலிஸ் ஆணையாளர் மகேந்திர ரெட்டி முன்வந்தார்.
அச்சிறுவனுக்கு காக்கி ஆடையை அணிந்து தனது நாற்காலியில் அமரச் செய்தார் மகேந்திர ரெட்டி பின்னர் ஆணையர் உட்பட அங்குள்ள பொலிஸார் அந்த சிறுவனுக்கு சல்யூட் அடித்தனர்.
இச்சிறுவனின் ஆசையை நிறை வேற்றியது தமக்கு சந்தோஷம் அளிக்கிறது என்று பொலிஸ் கமிஷனர் மகேந்திர ரெட்டி கூறியுள்ளார்.
அவனது ஆசையை நிறைவேற்றி வைத்ததால் மரணத்தின் விழிம்பில் இருக்கும் சறுவன் சாதிக் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply