தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பூர்த்தி; தொகுதி மட்டங்களில் வேலைத்திட்டம் தோழமை கட்சிகளை இணைத்து ஜனாதிபதி தேர்தலில் குதிப்போம்

2015 ஜனவரி மாதம் நடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல முன் னேற்பாடுகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செய்துள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவி த்தார். அநேகமாக ஜனவரி மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மேற்படி ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடந்த சில மாதங்களுக்கு முன்னரேயே எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜுலை மாதம் முதல் “நாட்டை பாதுகாக்கும் நீல அணி” என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டு நாடுமுழுவதுமுள்ள ஸ்ரீல.சு.கவை பலப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீல.சு.க.மகளிர் அமைப்பு, இளைஞர் அணி என சகல துறைகளும் பலப்படுத்தப்பட்டு கட்சி வேலைகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீல.சு.க. தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செல்வதே எமது நோக்கம் என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

நாட்டை பாதுகாக்கும் நீல அலை என்ற திட்டம் ஜுலை 2 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 160 தேர்தல் தொகுகளில் 145 தொகுதிகளில் ஸ்ரீல.சு.கவை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளோம்.

எனவே எதிர்வரும் காலங்களில் வரக்கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்க நாம் ஆயத்தமாக இருக்கிறோம்.

அடுத்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐ.ம.சு.முவிலுள்ள ஏனைய கட்சிக்கும் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் அடுத்த கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறோம்.

கடந்த 18, 19 ஆம் திகதிகளிலும் 22 நிர்வாக மாவட்டங்களிலுமுள்ள 20 மாவட்டங்களில் எமது ஸ்ரீல.சு.க. செயற்பாட்டாளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக பேசியுள்ளோம். இன்னும் இரண்டு நிர்வாக மாவட்டங்களிலுமுள்ள ஸ்ரீல.சு.க. அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்களையும் விரைவில் சந்தித்து பேசுவோம். இந்த சந்திப்பின் போது ஐ.ம.சு.முயில் அங்கம் வகிக்கும் கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்வர்.

அடுத்த கட்டமாக கிராமிய மட்டத்தில், தொகுதி மட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பலப்படுத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸியும் இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply