சுவீடனை சுற்றி வந்த மர்ம நீர்மூழ்கி கப்பல்: ரஷியா உளவு பார்த்ததா?

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து ஐரோப்பிய நாடுகள்–ரஷியா இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுவீடன் அருகே அந்த நாட்டின் கடல் பகுதிக்குள் மர்ம நீர்மூழ்கி கப்பல் ஒன்று சுற்றி திரிந்ததை சுவீடன் ராணுவம் கண்டுபிடித்தது. இதையடுத்து அந்த நீர்மூழ்கி கப்பலை பிடிப்பதற்காக சுவீடன் கடற்படை மற்றும் விமான படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. மின்னல் வேகப்படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது ரஷியாவின் நீர்மூழ்கி கப்பலாக இருக்கும் என்று சுவீடன் தெரிவித்துள்ளது. ஆனால் இதை ரஷியா உடனடியாக மறுத்துள்ளது. அது நெதர்லாந்து நாட்டு கப்பலாக இருக்கும் என்று ரஷியா கூறியது. ஆனால் நெதர்லாந்தும் தங்கள் நாட்டு கப்பல் எதுவும் அங்கு செல்லவில்லை என்று கூறியிருக்கிறது.

அது ரஷியாவின் நீர்மூழ்கி கப்பலாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. சுவீடனை உளவு பார்ப்பதற்காக நவீன கருவிகளை கடல் பகுதிக்குள் மறைத்து வைப்பதற்காக ரஷிய நீர்மூழ்கி கப்பல் அங்கு வந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply